ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வரும் முன் காப்போம் என்பது எப்போதும் பாதுகாப்பானது. அதை கடைப்பிடிப்பதும் எளிதானது. கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் பலனில்லை. குறிப்பாக நோய் வந்த பிறகு சிகிச்சை செய்தாலும் அவை முழுமையான பலனை அளிக்காது. மாறாக வலியும் வேதனையும் அதிகரிக்கும். இத்தகைய நிலையும் மன அழுத்தமும் இன்றி இயல்பாக எதிர்கொள்ள ஆரோக்கியம் குறித்து முன் கூட்டியே விழிப்புணர்வு தேவை.
மக்களின் வாழ்க்கைத்தரம் மட்டும் மகிழ்ச்சியைக் கொடுத்துவிடாது. நல்ல ஆரோக்கியம் நிறைந்த மக்களால்தான் அவர்கள் ஈடுபடும் துறைகளிலும் ஆரோக்கியமாக ஈடுபட முடியும். ஆரோக்கியமான மனிதனால் குடும்பமும் அவன் சார்ந்த சமூகமும் ஆரோக்கியமாக இருக்கும். அதே நேரம் தனிமனிதனின் ஆரோக்கியம் என்பது தனி மனிதனையோ அவர்கள் சார்ந்த குடும்பத்தையோ மட்டும் குறிப்பது அல்ல. ஒவ்வொரு மாநிலத்தின் நாட்டின் ஆரோக்கியத்தையும் சேர்த்து குறிப்பது.