இந்தியத் தூதரகம் ஆலை நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்புப் பணி குறித்த தகவல்கள் பெறப்படுகின்றன.
தலைநகர் கார்துமில் உள்ள செராமிக் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலை பார்த்துவந்தனர். இருநூறுக்கு அதிகமானவர்கள் பணியாற்றும் அந்த ஆலையில் புதன்கிழமை எல்பிஜி டேங்கர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
ஆலை முழுவதும் பரவிய தீயில் 18 இந்தியர்கள் உள்பட மொத்தம் 23 பேர் பலியாகியுள்ளனர். இந்தியர்களில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். சுமார் 130 பேர் காயமடைந்துளனர். 16 இந்தியர்கள் இந்த விபத்துக்குப் பின் காணவில்லை. இத்தகவலை இந்திய தூதரகம் அறிவித்துள்ள