ஜெர்மன் அருங்காட்சியகத்தில் இளம் வயது திருவள்ளுவர் சிலை

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ. பாலச்சந்திரன் கொடுத்த திருவள்ளுவர் சிலை, எல்லோரும் அறிந்த திருவள்ளுவர் சிலையிலிருந்து மாறுபட்டுள்ளது


ஜெர்மனியில் ஐரோப்பிய தமிழர்கள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் லிண்டன் அருங்காட்சியகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் இரு திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

இதற்கான விழாவில் ஜெர்மனில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் மற்றும் தமிழக ஆய்வாளர் கவுதம சன்னாவின் 'திருவள்ளுவர் யார் - கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர்' ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. திருக்குறளின் தமிழ் மொழிபெயர்ப்பை பிரெடரிக் காமரர், கார்ல் கிரவுல் ஆகியோர் செய்துள்ளனர்.