ரிலீஸுக்கு முன்பே ரூ. 250 கோடி வசூலித்த தர்பார்

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலமாக ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. தர்பார் படத்தை உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்கிறார்கள். படத்தை விளம்பரம் செய்ய மட்டுமே ரூ. 7 கோடி முதல் ரூ. 8 கோடி வரை செலவு செய்துள்ளனர். படம் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு சம்பளம் மட்டுமே ரூ. 90 கோடி ஆகும்.


ரூ. 250 கோடி


தர்பார் படம் ரிலீஸாகும் முன்பே ரூ. 250 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தர்பார் படத்தின் திரையரங்க உரிமையை ரூ. 70 கோடிக்கு விற்க லைகா முயன்றது. ஆனால் மொத்தமாக ரூ. 70 கோடி கொடுத்து உரிமையை வாங்க யாரும் தயாராக இல்லை. இதையடுத்து பகுதி வாரியாக தியேட்டர் உரிமை கொடுக்கப்பட்டுள்ளதாம். செங்கல்பட்டு பகுதி தியேட்டர் உரிமை ரூ. 13 கோடிக்கும், ஆற்காடு பகுதி ரூ. 6.5 கோடிக்கும், திருச்சி ரூ. 7 கோடியே 40 லட்சத்திற்கும், சேலம் ரூ. 6.5 கோடிக்கும், மதுரை-ராமநாதபுரம் பகுதி ரூ. 9 கோடிக்கும், திருநெல்வேலி-குமரி ரூ. 4.5 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம்.